ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சிவலக்ஷன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நடைபவனி, பிரண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து ஆரம்பித்து ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலகம், பிரதேச சபை, கல்வியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, ஆயுர்வேத வைத்தியசாலை, பிரண்டிக்ஸ் நிறுவனம் மற்றும் புற்றுநோய் கட்டுப்பாட்டுச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நடைபவனியின் போது, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுச் செய்திகளும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவம், உரிய மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் அவசியம் மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் பரவலாக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
.jpeg)

.jpeg)



.jpeg)

.jpeg)


.jpeg)



.jpeg)

.jpeg)
.jpeg)









