இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் திரு.பி.எல்.சந்தோஷ் அவர்களை 27.10.2026 நேற்று புதுடெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின் போது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அரசியல் தீர்வு, தற்போதைய அரசியல் சூழல், வடகிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் நலன் பல்துறை சார் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ்நாடு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை, அவர்களின் இருப்பை உறுதி செய்தல் மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





