சிறுவர் தினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு – மட்டக்களப்பு YMHA மண்டபத்தில் BEYS ஏற்பாட்டில் நிகழ்வு.

 


























EDITOR

மட்டக்களப்பு ஆரம்பப் பருவப் பாடசாலையான BEYS இன் 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் தினக் கொண்டாட்டம், குழந்தைகளின் மகிழ்ச்சியையும் குழந்தைப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வையும் ஒன்றிணைக்கும் வகையில், ஒக்டோபர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

“ஒன்றாகப் பாடுவோம்” (Singing Together) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில், BEYS மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து பாடல்கள் மற்றும் பல்வேறு அன்பான செயற்பாடுகள் ஊடாக சிறுவர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் சிறார்களின் குரல்களின் ஊடாக விழிப்புணர்வுச் செய்தி பகிரப்பட்டது.

மேலும், குழந்தைகள் ஒருவரை ஒருவர் அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லுணர்வை வளர்ப்பதுடன், ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை நிறைந்த ஆரோக்கியமான எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்புணர்வையும் இந்நிகழ்வு வலியுறுத்தியது.

“BEYS – சிறிய குரல்கள், பெரிய இதயங்கள்; அன்பையும் நம்பிக்கையையும் ஒன்றாகப் பரப்புவோம்” என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணியகத்தின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன், இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் நோபல் மரியசீலன், பேராசிரியர் டாக்டர் கருணாகரன், பல் வைத்திய நிபுணர் டாக்டர் கே. கெதீசன் மற்றும் BEYS அதிபர் திருமதி எட்வர்ட்ஸ் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதுடன், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக நிற்கும் மனிதநேயச் செய்தியையும் சமூகத்தில் எடுத்துச் சென்ற இந்நிகழ்வு, சிறுவர் தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு அர்த்தமுள்ள பரிமாணத்தை ஏற்படுத்தியது.