அவுஸ்திரேலியாவின் மல்கா (Mulka) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான யிவார்ன் மெக்ராத் (Yiwarr McGrath) நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்றார்.
அவரை வரவேற்கும் வகையில், பூர்வகுடி மக்கள் பாரம்பரிய உடையணிந்து, தங்களது கலாசார நடனத்துடன் நாடாளுமன்ற வளாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களின் கலாசார அடையாளத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.






