அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவை உதயம்

 


அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவையின் புதிய நிர்வாகசபை, நேற்று (18) ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பொதுநூலக மண்டபத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.

இதன்படி, பேரவையின் தலைவராக(president) )சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.ரி. சகாதேவராஜாவும்,செயலாளராக(secretary) செல்வி வினாயகமூர்த்தியும், பொருளாளராக(treasurer) இ. கோபாலசிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர்.

உப தலைவராக(vice president) கே. ஜெயசேகரனும், உப செயலாளராக(vice secretary) எஸ். சசிக்குமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.

நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களாக என். சௌவியதாசன், ரி. தர்மேந்திரா, எம். கிரிசாந்தன், ஈ. தினேஷ்கா, நா. தில்ஹாசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பேரவையின் ஆலோசகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் க. குணராசா தெரிவு செய்யப்பட்டார்.

உறுப்பினர்களாக இ. ராஜகுமார், வி. கிருஜன், எஸ். தனோசன், ரி. சதீஷ், ஜே. பூமிதன், எல். கஜரூபன், பி. சந்திரமோகன், ஜி. அனுஜன், எம். கிவிசாந், எல். சுலக்க்ஷன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், பேரவையின் ஒருங்கிணைப்பாளராக(coordinator)வ. டினேஸ், ஆசிரியராக(editor) லோ. ரிசாந்தினியும் தெரிவு செய்யப்பட்டனர்.