மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காரைதீவிலிருந்து மட்டக்களப்பு வரையிலான தெய்வீக ரத ஊர்வலம் 04.10.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குருக்கள் மடத்திலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் மாலை கல்லடியில் அமைந்துள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை சென்றடைந்தது.
தாளங்குடா, ஆரையம்பதி சிவனேஸ்வரர் ஆலய தொண்டர்கள் ரத ஊர்வலத்தை வரவேற்றனர். பின்னர் மஞ்சந்தொடுவாய், நாவற்குடா பகுதிகளில் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணருக்கான விசேட பூஜைகள் நடைபெற்றன.
மக்கள் வீதியோரங்களில் நிறைகுடம் வைத்து ரத ஊர்வலத்தை வழிபாடு செய்தனர்.
இப்புனித ஊர்வலத்தில் கல்லடி இராமகிருஷ்ண மிஷனின் சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தா மகராஜ், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர்.
இறுதியாக கல்லடி பேச்சியம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் நிறைவுற்று, ஊர்வலம் இராமகிருஷ்ண மிஷனைச் சென்றடைந்தது.
இவ்வூர்வலத்தின் சிறப்பம்சமாக பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர், தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியர், வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் ஆகியோரது உருவங்கள் தாங்கிச் செல்லப்பட்டன.

























-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)




