வரதன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை” எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வதிவிட தினத்தை முன்னிட்டு உள்ளூரில் இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற வீட்டுக் கடன் உதவிகளைப் பெற்று அவற்றை நிறைவு செய்தவர்களுக்கான வீட்டு உரிமை பத்திரம் வழங்கும் நிகழ்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பழைய செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் பிரதேச அபிவிருத்திக்குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை வழங்கி வைத்தார் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ் அருள்ராஜ் தலைமையின் கீழ் இடம் பெற்ற நிகழ்வில் மாவட்ட செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட 100பயனாளிகளுக்கு வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இன்றைய இந்த நிகழ்வுக்கு மாவட்ட விடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எஸ் சு பாஸ்கரன் மற்றும் மாவட்ட செயலக மாவட்ட வீடு அமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)




