முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ கைது?

 

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, லஞ்ச ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது தங்கியிருக்கும் கிருலப்பனையில் உள்ள இல்லத்தில் வைத்தே இவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டார்.
அரசு வங்கி ஒன்றில் இருந்து 10 மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று, அதனைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் குற்றமிழைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.