மண்முனைப்பற்றில் வீட்டுக் கனவு நனவானது – உலக குடியிருப்பு தினத்தில் புதிய வீடுகள் கையளிப்பு!”

 














 உலக குடியிருப்பாளர் தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் NHDA வீடமைப்பு வேலைத்திட்டத்துக்காக தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளின் வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது... கிரான்குளம் , கிரான்குளம் மத்தி , கிரான்குளம் வடக்கு , செல்வாநகர் , செல்வாநகர் ஆகிய கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவுகளில் இன்றைய தினம் பூரணப்படுத்தப்பட்ட வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் பிரதேச ஒருங்கினைப்புக. குழுவின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் த.சுபாக்கரன் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , வீடமைப்பு அதிகாரசபையின் கணக்காளர் , சமூக வலுவூட்டல் உத்தியோகஸ்த்தர்கள் , கிராம உத்தியோகஸ்த்தர்கள் , பிரஜாசக்தி உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.