மட்டு. சிவாநந்தியன் சிறகுகள் அமைப்பு நடாத்திய ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு

 


















 



 
 

 




 





 




 































  வரதன்& sivakumar ( photos)  மட்டக்களப்பு சிவாநந்தியன் சிறகுகள் அமைப்பு நடாத்திய ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும், வருடாந்த நண்பர்கள் சங்கமும் சனிக்கிழமை 17.10.2026 விரிட்ஜ் வியூ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. மட்டக்களப்பு சிவாநந்தியன் சிறகுகள் அமைப்பின் தலைவர் இ.முகில்வளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக முன்னாள் அதிபர் ஈ.பி.ஆனந்தராஜா, முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் சிவானந்தா வித்தியாலய அதிபர் எம்.தயாபரன், பழைய மாணவர் சங்க கல்வி இணைப்பு செயலாளர் இ.சாஜிராஜன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். இதன்போது சிவானந்தா தேசிய பாடசாலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிபர் ஈ.பி.ஆனந்தராஜா, ஒய்வுபெற்ற ஆசிரியைகள், பழைய மாணவர் சங்க கல்வி இணைப்பு செயலாளர் இ.சாஜிராஜன் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நினைவுச் சின்னம் மற்றும் நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவப்படுத்தப்பட்டனர். இந்நிகழ்வில் சிவானந்தியன் சிறகுகள் அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.