ஷிரந்தி ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என நீதிமன்றத்தில் வெளிப்படை

 

 


முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தபோதிலும், அவருக்கு அஞ்சியோகிராம் (Angiogram) பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்வைக்கப்பட்டக் கருத்துகளைக் கவனத்தில் கொண்ட நீதிமன்றம், ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.