நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பொதுமக்கள் பார்வையிடவும் கொள்வனவு செய்யவும் வசதியாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘சிரிசர ஷில்ப 2026’ சிறைச்சாலை கைத்தொழில் கண்காட்சி நேற்று (27) பத்தரமுல்லை தியத்த உயன வளாகத்தில் நடைபெற்றது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலைமையில் இக்கண்காட்சி நடைபெற்றது.
இதன்போது, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிட்டனர்.








