உலக வதிவிட தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் வீடுற்றவர்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு


 

 










  வரதன்

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை” எனும்  வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று  நடைபெற்றது

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிரும் பிரதேச அபிவிருத்திக்குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கி.சுபாஸ்கரன் தலைமையின் கீழ் இடம் பெற்ற நிகழ்வில்

 தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் 10இலட்சம் ரூபா நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் “சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை” எனும் திட்டத்தின் கீழ் மண்முனை  வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  10 பயனாளிகளுக்கு இன்றைய தினம் புதிய வீடுகள் திறந்து கையளிக்கப்பட்டுள்ளது

 பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட வீடு அமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.