அரச வங்கியொன்றில் தலைமைப் பணக் காப்பாளராகப் பணியாற்றிய சந்தேக நபருக்கு எதிராக, மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வரவு வைத்தமை, தெஹிவளை கிளைக்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் 11 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வரவு வைத்தமை மற்றும் வங்கிக்குச் சொந்தமான கணக்குகளில் இருந்த பணத்தை மென்பொருளைப் பயன்படுத்தி கள்ளப் பணமாக மாற்றியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மூன்று குற்றச்சாட்டுகளையும் சந்தேக நபர் உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி காசாளருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த ஹோமாகம உயர் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க, அந்தத் தண்டனையை 15 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
.jpg)




