மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை கல்விப் பணியக செயலாற்றுப் பணிப்பாளராக அருள்ராஜா நியமனம்

 



( வி.ரி.சகாதேவராஜா)
 மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை  புதிய கல்விப்பணியக செயலாற்றுப் பணிப்பாளராகவும்   கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் பணிப்பாளர் சபை  உறுப்பினராகவும் ( Board of director  eastern province)  ரி.அருள்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இந்த நியமனத்தை வழங்கினார்.

 01.10.2026 அன்று அருள்ராஜா மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் தனது கடமையை  பொறுப்பேற்றுக்கொண்டார் .

மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த திரு.
அருள்ராஜா ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியராவார்.