ஏறாவூர் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவிக்கரம்! – 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரங்கள் பகிர்ந்தளிப்பு


















ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தி செயற்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

தையல் இயந்திரங்களைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் பங்கேற்புடன், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் SH. முஸம்மில் தலைமையில் பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, சுமார் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் ஊடாகப் பயனாளிக் குடும்பங்கள் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி, தமது வருமானத்தை அதிகரிப்பதற்கும் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரஜா சக்தி அமைப்பின் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

– BATTI MEDIA –