மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கான "Digital Marketing" தொடர்பான பயிற்சிநெறி

 

























மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துடன், மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்த இரு நாட்களை கொண்ட சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான "Digital Marketing" தொடர்பான பயிற்சிநெறியானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமை மற்றும் ஆலோசனையின் கீழும் , உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டத்தில் 2026.09.10 - 11 ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றது.

கைத்தொழில் முயற்சியாளர்கள் தங்களுடைய உற்பத்திகளை இணையம் மூலமாக விற்பனை செய்வதன் மூலம் சுயதொழில் வாய்ப்பை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு இடம்பெற்ற இந்த பயிற்சிநெறியில் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 35 தொழில் முயற்சியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர். 

இந்த பயிற்சி நெறியின் வளவாளராக திருமதி சரண்யா லவபிரதன்  (முகாமையாளர் - Esoft Metro Campus) கலந்துகொண்டு மிகவும் சிறப்பான முறையில் பயிற்சிநெறியை நடாத்தியிருந்ததுடன், இந்த பயிற்சிநெறியை பிரதேச செயலக மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கே. ரவீந்திரன் ஒழுங்கமைப்பு செய்திருந்தார்.

இந்த நிகழ்வில் உதவி பிரதே இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், மாவட்ட செயலக மனிதவலு மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு கே  கருணாகரன், பிரதேச செயலக மனிதவலு மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு தீசன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்த பயிற்சி நெறியின் முடிவில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது