புதிய முறை "இனி பாடப் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை!" பள்ளிப் பைகளின் எடையைக் குறைக்க அரசு நடவடிக்கை!

 


நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ், பாடசாலை மாணவர்களின் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், 2027 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் தர மாணவர்களுக்குத் தொகுதி அடிப்படையிலான (Module-based) கற்றல் முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். இப் புதிய முறைமையின் கீழ், வகுப்பறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும் என்பதுடன், தவணையின் இறுதியில் மாத்திரமே அவை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும், இதனால் மாணவர்கள் தினமும் அதிகளவிலான புத்தகங்களைச் சுமந்து செல்வது தவிர்க்கப்படும் என்றும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.