அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற ஸ்தாபகரும் தலைவருமான நா. இதயராஜன் அவர்களுக்கான தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையில் கௌரவிப்பு!



 








 

 




























அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஸ்தாபகரும் தலைவருமான நா. இதயராஜன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பிறந்தநாள் கொண்டாட்டமும் நேற்று (07.09.2026) திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில், பாடசாலை வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையை அனைவரும் பாராட்டிப் பேசினர்.

நிகழ்வில் நிருவாகக்குழு உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்களினால் அவருக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.