பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அரச திணைக்கலங்களின் உயர் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு.







வரதன்



ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைகமைவாக அரச திணைக்கலங்களுக்கு வரும் பொதுமக்களுக்கான சேவையினை வினைத்திறனாக வழங்கும் பொருட்டு 

உயர்தரமான பொதுச் சேவையை உருவாக்கும் நோக்கில் பணியிட சீர்திருத்தம் மற்றும் சமூக உரையாடல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (10)  பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

“Building a High-Quality Public Service Through Workplace Reform” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த வீரசிங்க மற்றும் கலாநிதி சுமனதாஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கலந்துகொண்டு புதிய அரசாங்கத்தின் அரச சேவை கொள்கைகள் பற்றி இங்கு விரிவான விளக்கங்களை வழங்கி வைத்தார்

இதன்போது, பணியாளர்களின் பங்கேற்பை வலுப்படுத்துதல், தரமான பொதுச் சேவையை வழங்குவதற்கான மூலோபாய அணுகுமுறைகள் மற்றும் பணியிடங்களில் சமூக உரையாடலின் முக்கியத்துவம் தொடர்பில் விளக்க கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள்,  தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மாவட்டத்தில் புதிய பணியிட மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் இவ் மன்ற உறுப்பினர்கள் மூலம் தொழிற்சங்க   பிணக்குகளை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிவகை மேற்கொள்ளப் பட்டது