கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை மணல் ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று( 10 ) கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
இன்று காலைமுதல் ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வேத பாராயணங்கள் ஒலிக்க பக்தர்களின் அரோகரா கோசத்துடன், அரசடிப்பிள்ளையாருக்கு பக்தி பூர்வமாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
ஐந்து நாட்கள் இடம்பெறும் இப் பெருவிழாவில் 13 ம் திகதி தேரோட்டமும், 14 ம் திகதி ஆவணி சதுரச்சியில் தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலய உற்சவங்கள் யாவும் ஆலய பிரதம குரு ஹரிகர சர்மா தலையிலான குழுவினரால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.













































