: அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த கல்லடி சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள்

 
 

 

EDITOR


அகில இலங்கை ரீதியில் இந்து கலாசார அமைச்சினால் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் தேசிய ஆக்கத்திறன் போட்டிகள், நீதிநூல் ஒப்பித்தல் போட்டிகள், கதாபிரசங்கப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி, மட்டக்களப்பு கல்லடி சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனைகளைப் புரிந்துள்ளனர் .

மாணவர்களின் ஆற்றல், அறிவு, படைப்பாற்றல் மற்றும் ஆன்மிகத் திறன்களை ஊக்குவித்து, அவர்களது திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் இப்போட்டிகள் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்போட்டிகள் முதலில் பிரதேச மட்டம், மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் நடத்தப்பட்டு, ஒவ்வொரு மட்டங்களிலும் முதலிடம் பெறும் மாணவர்கள் தேசிய மட்ட இறுதிப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெறுகின்றனர். தேசிய மட்டப் போட்டிகள் கொழும்பில் நடைபெறுகின்றன.

அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கல்லடி பெருநிலப்பரப்பிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
 

கதாபிரசங்கப் போட்டி-  செல்வி ஜெ. லக்ஷான்யா

    2023 – தேசிய மட்டத்தில் 2ஆம் இடம்
    2024 – தேசிய மட்டத்தில் 1ஆம் இடம்
    தொடர்ச்சியாக சிறப்பிடம் பெற்று இரண்டு தேசிய விருதுகளை தனதாக்கியுள்ளார்.


செல்வி.வி. மோஹர்ஷ்வினி.      2025 – கதாபிரசங்கப் போட்டியில் 3ஆம் இடம்

 நீதிநூல் ஒப்பித்தல் போட்டி   செல்வன் வி. சாரகேசன்


    அறநெறிப் பாடசாலைகட்கிடையிலான தேசிய மட்ட 
நீதிநூல் ஒப்பித்தல்
செல்வி.வி. தருணிகா.
2024 2ம் இடம்
2025 1ம் இடம


இவ்வாறு பல்வேறு ஆண்டுகளில் தேசிய மட்டத்தில் சிறப்பிடங்களைப் பெற்று விருதுகளை வென்றுள்ள மாணவர்கள், தங்களது திறமைகளின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவர்களின் திறமைகளை இனங்கண்டு, அவர்களை முறையாக நெறிப்படுத்தி, போட்டிகளுக்குத் தயார்படுத்தி, தேசிய மட்ட சாதனையாளர்களாக உருவாக்குவதில் கல்லடி சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர்  திருமதி தே. அருட்சோதி  மற்றும்    ஆசிரியர்ளின் அர்ப்பணிப்பும் வழிகாட்டலும் பாராட்டுக்குரியதாகும்.

அறநெறிக் கல்வியுடன் மாணவர்களின் கலைத்திறன்களையும் வளர்த்து, தேசிய மட்டத்தில் சாதனையாளர்களை உருவாக்கி வரும் கல்லடி சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையின் பணி தொடர வேண்டும் என்பதே கல்வி மற்றும் கலாசார ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

 

 .