அத்தம” தேசிய தூய்மைத் திட்டம் காத்தான்குடியில் முன்னெடுப்பு — கந்தசாமி பிரபு தலைமையில் ஆற்றங்கரை தூய்மைப்படுத்தல்

 










தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் மாவட்ட நிகழ்வு காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வட்டார ஆற்றங்கரைப் பகுதியில் உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் தூய்மைப்படுத்தப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “அத்தம” தேசிய தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் வட்டார ஆற்றங்கரைப் பகுதி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் வழிகாட்டலில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இன்று தூய்மைப்படுத்தப்பட்டது.
இத்தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத், இராணுவத்தினர், பொலிஸார், விமானப்படையினர் மற்றும் அரச பணியாளர்கள் , clean ஶ்ரீலங்கா பிரஜாசக்தி பிரமுகர்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.