கொழும்பு கோட்டை டிரான்ஸ்வொர்க் சதுக்க நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவி செய்வதற்காக, கிரிஷ் (Krrish) தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிடமிருந்து மூன்று சந்தர்ப்பங்களில் 70 மில்லியன் ரூபாய் (700 இலட்சம்) லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரமவின் உத்தரவிற்கமைய, வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்ற லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் விவகாரத்தில் 1,000 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பதியப்பட்டுள்ள இரண்டாவது பிரதான லஞ்ச வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.





