மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில், தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு அண்மித்த பகுதியில் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய இராசையா பாக்கியம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் அப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் வகையில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும், நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





