கல்விக்கு பெரும் சவால்: ஐந்து ஆண்டுகளில் 2.65 இலட்சம் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகல்!

 


கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் முதலாம் தரம் முதல் பத்தாம் தரம் வரையிலாக ஏறத்தாழ 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடை விலகியுள்ளதாக புனர்வாழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கு இளைஞர்கள் பெருமளவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவது முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அந்தப் பணியகத்தின் ஆளுநர் சபைத் தலைவர் பேராசிரியர் வசந்தா சுபசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

18 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகின்றது.

அத்துடன், நண்பர்களின் பழக்கவழக்கங்களின் தாக்கம் காரணமாக தற்போது பெண் பிள்ளைகளும் பல்வேறு போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அடிமையாகி வருவதினை அவதானிக்க முடிகின்றது.

 பாடசாலைகளிலிருந்து விலகும் மாணவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி, அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட ஆபத்தான நிலைமைகளுக்குள் செல்வதைத் தடுப்பதற்கு விரைவான வேலைத்திட்டமொன்று முன்னெடுப்பது அவசியம் என்றார்.