முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லை 25 - 35 வயதுக்கு இடைப்பட்டதாகத் திருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

 


 

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

குறித்த சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த வயது எல்லையை 25 - 35 வயதுக்கு இடைப்பட்டதாகத் திருத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவதற்கான யோசனை தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இது தொடர்பில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே முன்னதாக குறிப்பிட்டுகையில், முச்சக்கர வண்டி செலுத்துவது தொடர்பில் முறையான ஒழுங்குபடுத்தலைச் செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்படி, முச்சக்கர வண்டியை செலுத்தக் குறைந்தபட்ச வயது எல்லையை 40 ஆக உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.