-Edited.jpg)
செய்தி ஆசிரியர்
மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் முப்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா, 2026 ஆகஸ்ட் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு பிள்ளையாரடியில் அமைந்துள்ள மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் இலக்கியம் மற்றும் கலைத்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மூன்று முக்கிய நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.
அந்த வகையில், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான ‘வெல்லவூர்ச் சாகரம் – கவிக்கோ அமுதவிழா மலர்’, கலாநிதி தாக்ஷாயினி பரமதேவன் அவர்களின் ‘பரதநாட்டியமும் கண்டிய நடனமும் – ஒரு ஒப்பீட்டு ஆய்வு’ மற்றும் இலக்கிய கலாநிதி கவிக்கோ வெல்லவூர் கோபால் அவர்களின் ‘வாழும் நினைவுகள் – அனுபவப் பகிர்வு’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் சி. மௌனகுரு, பேராசிரியை பாரதி புளோரன்ஸ் கென்னடி, அருட்திரு அ.அ. நவரெத்தினம் (நவாஜி) மற்றும் திரு. ச. சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நூல்களின் முதற்பிரதிகளை திரு. க. நாராயணபிள்ளை மற்றும்
வைத்திய கலாநிதி செ. கிரிதரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது வெளியிடப்பட்ட நூல்கள் தொடர்பான மதிப்பீட்டு உரைகளும் இடம்பெற்றன. ‘வெள்ளவூர்ச் சாகரம்’ நூல் தொடர்பான மதிப்பீட்டு உரையை மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மு. கணேசராசா ஆற்றினார்.
‘பரதநாட்டியமும் கண்டிய நடனமும் – ஒரு ஒப்பீட்டு ஆய்வு’ நூல் தொடர்பான மதிப்பீட்டு உரையை கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைத் தலைவர் பேராசிரியர் நா. வாமன் வழங்கினார்.
அதேவேளை, ‘வாழும் நினைவுகள்’ நூல் தொடர்பான மதிப்பீட்டு உரையை கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரம் ஆற்றினார்.
நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, செல்வி அ. ரோஷினி மற்றும் செல்வி அ. மேரி ஜெனிபர் ஆகியோரின் கடவுள் வாழ்த்து, திருமதி திலகவதி ஹரிதாஸ் அவர்களின் வரவேற்புரை மற்றும் விழாத் தலைவர் சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையுரை ஆகியவற்றைத் தொடர்ந்து நூல் வெளியீட்டுச் சிறப்புரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பிரதிக் கொடை வழங்கல், சிறப்பு விருந்தினர்களின் உரைகள், ஏற்புரை மற்றும் நன்றியுரை ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வை திரு. இரா. பிரதீஸ்காந்த் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில், திருமதி பிரியா கருணாகரன், திரு. ச. கணேசமூர்த்தி, திரு. வே. அமிர்தலிங்கம் மற்றும் திரு. த. குணரெத்தினம் ஆகியோர் ஒழுங்கமைத்து நடத்தினர்.
தமிழ் இலக்கியம், கலை மற்றும் பண்பாட்டு ஆவணப்படுத்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடைபெற்ற இம்முப்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா, மட்டக்களப்பின் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.










































-Edited.jpg)


-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)

-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)





