பாடசாலைச் சந்திக்கு அருகில் இரு பெண்களுடன் பேசிய இளைஞரை வீடியோ எடுத்ததால் மோதல்: எஹெலியகொடயில் மாணவனைக் கொலை செய்துவிட்டு தப்பிய நபர்!

 


இரத்தினபுரி, எஹெலியகொட – எரெபொல பகுதியில் கைத்தொலைபேசி காணொளிப் பதிவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
எஹெலியகொட தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எரெபொல பாடசாலைச் சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் இரு இளம் பெண்களுடன் பேசிக்கொண்டிருந்ததைக் காணொளி பதிவு செய்தமை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இதனையடுத்தே சந்தேகநபர் மாணவனின் வீட்டிற்கு அருகில் சென்று அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். படுகாயமடைந்த மாணவர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை எஹெலியகொட பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Image : AI generated