சர்வதேச புகைப்பட விருதில் கிழக்கு இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞருக்கு 3ஆம் இடம்




அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் Ravichandran Dilochchini சர்வதேச அளவில் முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

International Photography Awards (IPA) போட்டியில் அவர் சமர்ப்பித்த “Feeding on Our Mistakes” என்ற புகைப்படம் Nature / Environmental / Editorial பிரிவில் 3ஆம் இடத்தை பெற்றுள்ளது.

மேலும், இந்தப் புகைப்படம் போட்டியின் Jury Top 5 Selection-இலும் இடம்பெற்றுள்ளது. நடுவர் Rong Jiang, மனித நடவடிக்கைகளால் இயற்கை மற்றும் வனவிலங்குகள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை வெளிப்படுத்தும் சிறந்த drone photography எடுத்துக்காட்டாக இந்தப் படைப்பை பாராட்டியுள்ளார்.

இந்த அங்கீகாரம், இலங்கையின் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சர்வதேச அளவில் கவனத்திற்கு கொண்டு செல்லும் முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது.