1,21,000 பேரை அரச சேவையில் புதிதாக இணைக்க திட்டம் – ஜனாதிபதி



நாடளாவிய ரீதியில் 1,21,000 பேரை அரச சேவையில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களில் 23,000 பேர் ஆசிரியர்களாக இருப்பார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நொச்சியாகமவில் நேற்று (13) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.