கணவரின் குரலாக மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி லிமினி" செப்டம்பர் 12 அனுராதபுர பேரணியில் லிமினி ராஜபக்ஷ

 


எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மாபெரும் மக்கள் பேரணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி லிமினி ராஜபக்‌ஷவும் பங்கேற்கவுள்ளதாகக் கட்சி அறிவித்துள்ளது.
​இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த நோச்சியாகம பிரதேச சபை உறுப்பினர் செனிவிரத்ன ஜெயவர்தன, கட்சியின் தலைமைப்பீடம் இதனைத் தமக்கு உறுதிப்படுத்தியுள்ளதாகவும், நாமல் ராஜபக்‌ஷ சிறையிலுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் லிமினி ராஜபக்‌ஷவின் வருகை பேரணிக்கும் கட்சிப் போராளிகளுக்கும் மாபெரும் பலத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.