அபாயகரமான பஸ் சாரதிகளைப் பற்றி பொலிஸாருக்கு உடனடியாகத் தெரிவியுங்கள்!" வாட்ஸ்அப் இலக்கத்தை அறிவித்தது பொலிஸ் - 070 4755600 -

  

 


நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொறுப்பற்ற முறையில் பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகள் குறித்து 070 4755600 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் ஊடாகத் தகவல் தெரிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்துவது வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு செயற்பட்ட பல சாரதிகள் கைது செய்யப்பட்டு அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.J. சேனாடீர தெரிவித்துள்ளார்.
பேருந்து இலக்கத் தகடு மற்றும் வீதி இலக்கம் தெளிவாகத் தெரியும் காணொளி ஆதாரங்களை (Video Evidence) அனுப்புமாறு கோரியுள்ள பொலிஸார், நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குப் புதிய மதுபோதை பரிசோதனை கருவிகளை வழங்கி சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.