இலங்கையின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு.

  

 

 


இலங்கையின் புதிய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக முன்னெடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) பாராட்டியுள்ளார்.

​எனினும், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் காட்டும் அதே தீவிர ஆர்வத்தை, நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதிலும் அரசாங்கம் காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, பொலிஸ் காவலில் நிகழும் மரணங்கள் மற்றும் அண்மைய காலத்தில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்கள் குறித்துத் தமது கவனம் திரும்பியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பிரதானி சுட்டிக்காட்டியுள்ளார்.

​அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும் வரை, அச்சட்டத்தின் கீழ் நபர்களைக் கைது செய்வதை இடைநிறுத்துமாறும், தற்போது அச் சட்டத்தின் கீழ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.