நாட்டின் வளர்ந்து வரும் இளம் மொடலிங் திறமையாளர்களை அடையாளப்படுத்தும் 'Sri Lankan Upcoming Model 2026' மாபெரும் அழகன் மற்றும் அழகித் தெரிவுப் போட்டி யாழ்ப்பாணத்தில் மிக விமரிசையாக நடைபெற்று முடிந்தது.
'Stylo Rami Model Academy' நிறுவனர் ஹரன் ரம்மின்சன் அவர்களின் சிறப்பு ஏற்பாட்டில், உரும்பிராய் நிழல் கஃபே Royal VIP Hall இல் ஆகஸ்ட் 02 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில், நடுவர்களாகவும் சிறப்பு விருந்தினர்களாகவும் இந்தியாவில் இருந்து வருகை தந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியாட்டத்தில், Siyana ‘Miss Sri Lankan Upcoming Model 2026' பட்டத்தையும் Kisokumar ’Mister Sri Lanka Up Coming model 2026 ‘ வென்று மகுடம் சூடினார்கள்
.jpeg)





