மட்டு - துஷாரா
இலங்கையில் கடந்த 30 வருட காலமாகத்
தொழிற்பட்டு வரும் பிரபல SKO கராத்தே கிளை கழகத்தின் புதிய பயிற்சி
நிலையம், ஆரையம்பதி பிரதேசத்தில் நவீன வசதிகள் மற்றும் பயிற்சி
உபகரணங்களுடன் நேற்றையதினம் (04) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பைத்
தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இக்கழகம், மாவட்டத்தின் பல்வேறு
பகுதிகளிலும் தனது கிளைகளை விரிவுபடுத்தி வரும் நிலையில், அதன் ஒரு
கட்டமாகவே ஆரையம்பதியில் புதிய பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப் புதிய கிளையின் திறப்பு விழா, ஆசிரியர் திரு. த.வினோசாந்த் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் திருமதி.
தெட்சண கௌரி தினேஷ் அவர்கள், புதிய கிளை நிலையத்தை உத்தியோகபூர்வமாகத்
திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகப் பாடசாலை
அதிபர்கள், SKO கழகத்தின் தலைமைப் பொறுப்பாசிரியர் K.T. பிரகாஸ், சிறப்புப்
போதனாசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்து
சிறப்பித்தனர்.
விழாவின் முக்கிய அங்கமாக, கராத்தே பயிற்சி பெற்ற
மாணவர்களுக்கான தரப் பட்டிகள் (Belts) மற்றும் சான்றிதழ்கள் அதிதிகளால்
வழங்கி கௌரவிக்கப்பட்டன.
ஆரையம்பதி பகுதியில் பல மாணவர்களைத்
தொடர்ந்து பயிற்றுவித்து வரும் இக்க கழகத்தின் மாணவர்கள், கடந்த காலங்களில்
நடைபெற்ற பாடசாலை மற்றும் மாகாண மட்டத்திலான கராத்தே போட்டிகளில்
பங்குபற்றி பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)




