வரதன்
எமது அரசாங்கம் துறை சார் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி ஜனாதிபதி
தேவையான முன் ஆயத்த பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய ஏற்பட்டுள்ள அதிக உஷ்ட நிலை வரட்சி காரணமாக குளங்களில் நீர்மட்டம் குறைந்து வருகின்றது இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் முன் ஆயத்தமாக சில மணி நேர நீர் வெட்டுக்களை அமல்படுத்தி வளங்களை கட்டுப்படுத்தி வருகின்றோம்
அதிக வறட்சியாக உள்ள இடங்களில் குடிநீரை வழங்க அனர்த்த முகாமைத்துவ நிலையம் பிரதேச சபை பிரதேச செயலகங்கள் ஊடாக குடிநீரை வழங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்
விவசாயிகளுக்கு வேண்டிய நீர்னை வழங்கவும் தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது பொதுமக்கள் விவசாயிகள் மீனவர்களுக்கு வேண்டிய நீர் வழங்க முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது
எவ்வாறான அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டாலும் அதனை முகம் கொடுக்க வேண்டிய திட்டங்களை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம் என
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இன்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்





