மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையுடன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் “வீட்டினை அடிப்படையாகக் கொண்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி” தொடர்பான பெற்றோர் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வு, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கே. விஷ்ணுகாந் அவர்களின் ஒருங்கிணைப்பில், மண்முனைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திரு. கி. இளங்குமுதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வளவாளராக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. G. உமாரமணன் கலந்து கொண்டு, வீட்டுச் சூழலில் சிறுவர்களின் ஆரம்பகால வளர்ச்சியை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்கு மற்றும் பொறுப்புகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தில் 65 முன்பிள்ளைப்பருவ சிறார்களின் பெற்றோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிறார்களின் முழுமையான வளர்ச்சிக்கு வீட்டுச் சூழல் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், பெற்றோர்களை விழிப்புணர்வூட்டும் இவ்வாறான நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)

.jpeg)
.jpeg)





