.
தேசிய புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு, ஏற்கனவே 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவ்விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காகவே அவருக்கு மேலும் 90 நாட்களுக்கு இவ்வாறு தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது





