வவுனியா:
வவுனியா - மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் வீடு புகுந்து 51 வயதுடைய பெண்
ஒருவரை கூட்டு வன்புணர்வு செய்து, பெருமளவான சொத்துக்களைக் கொள்ளையடித்த
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார்
அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடந்த
8 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட தீவிர
விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்,
கொள்ளையிடப்பட்ட பெருமதிமிக்க சொத்துக்கள் பொலிசாரால் வெற்றிகரமாக
மீட்கப்பட்டுள்ளன.
80 இலட்சம்
ரூபாய் பெறுமதியான இரத்தினக் கல் , 15 பவுண்களுக்கு அதிகமான தங்க நகைகள் , 5
இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் । வாகனப் புத்தகங்கள் மற்றும்
காணி உறுதிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட
பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது
சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட குடும்ப அல்லது தனிப்பட்ட முரண்பாடுகளே
இக்கொடூரச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என பொலிசார்
சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.