எகிப்தின்
அலெக்ஸாண்டிரியா கடற்பகுதியில் வீசிய பலத்த அலைகளில் சிக்கி மூழ்கும்
அபாயத்திலிருந்த 6 பேரை மீட்டு, 18 வயதான ஜியாத் முகமட் அகமட் முகமூட் என்ற
இளைஞர் உயிரிழந்துள்ளார். கொந்தளிப்பான கடலுக்குள் சிறிதும் தயக்கமின்றி
குதித்து, சக்திவாய்ந்த அலைகளுடன் போராடி 6 பேரை அவர் பத்திரமாக கரைக்குக்
கொண்டுவந்து சேர்த்துள்ளார்.
எனினும், கடைசி நபரை மீட்ட பின்னர் அலைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதால் ஏற்பட்ட கடுமையான சோர்வு காரணமாக அவரால கரை திரும்ப முடியாமல் கடலில் மூழ்கினார். தன் உயிரைப் பணயம் வைத்து 6 மனித உயிர்களைக் காப்பாற்றிய அந்த இளைஞனின் இணையற்ற தைரியத்தையும் தியாகத்தையும் எகிப்து மக்கள் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.