மட்டக்களப்பில் வீட்டு முற்றத்தில் சக்தி வாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.










 மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் 25.08.2026 இன்று மதியம்  சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில் உள்ள வீடொன்றின் முற்றத்தில்  வீட்டு உரிமையாளர் பயிர்ச் செய்கைக்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது சக்தி வாய்ந்த 81 ரக மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் காத்தான்குடி பொலிசாருக்கு குறித்த குண்டு தொடர்பாக தகவல் வழங்கியதை அடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்

நீண்ட காலமாகப் துருப்பிடித்திருந்த புதைந்திருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த வெடிபொருள் விடுதலைப் புலிகளின் காலத்தில் இக்குண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி  பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது