மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது
தலைமையில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டமானது
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரீ.ஜெயசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் ஆளுமை திறன் மற்றும் தொழில் துறை மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட மேலும் பல விடையங்கள் சார்ந்து அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மேம்பாட்டு திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கை இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்களை அமுள்ப்படுத்துவது தொடர்பாக இதன் போது விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
தொழில் பயிற்சி நிறுவனங்களை யும் கைத்தொழில் நிறுவனங்களையும்
ஒன்றினைத்து பயணிப்பதே இம் மன்றத்தின் பிரதான நோக்கமாக கொண்டு
அமைந்திருந்ததுடன்,
மாவட்டத்தில் நிலவும் தொழில் துறை சார்ந்த கேள்வி மற்றும் நிரம்பலுக்கு
இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதனால் அந்த இடைவெளியை குறைப்பதே இந்த
கூட்டத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலக உயரதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள், தொழிலதிபர்கள், தொழில்சார் வல்லுனர்கள், சமூகம் சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.





