நாட்டில் உலர் வலயத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு சடுதியாக குறைவடைந்துள்ளது. பிரதான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 36 சதவீதம் வரை குறைந்துள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டில் அம்பாந்தோட்டை,மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 30 சதவீதத்தை விடக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
பொதுவாக ஓகஸ்ட் மாதத்தில் வறட்சியான காலநிலை காணப்பட்ட போதிலும், இந்த ஆண்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
அத்துடன், நிலவும் அதிக வெப்பம் காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் வேகமாக ஆவியாகி வற்றிப் போகிறது.இந்த நிலைமையினால் நீரின் தேவை அதிகரித்து வருகின்ற போதிலும், நீர் வளம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
தன் காரணமாக, கடும் வறட்சியான வானிலை நிலவும் பகுதிகளில் குடிநீர் தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்காக நீரை ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதால், விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விடுவிப்பது கடினமாகக்கூடும்.
குடிநீர் விநியோகம் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், சில பகுதிகளில் விவசாயத்திற்காக விடுவிக்கப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுஇஇந்த சவாலான சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான ஒரே மாற்று வழி, நீரை மிகவும் கவனமாகப் பயன்படுத்துவதும், சூழலுக்கு இணங்க செயற்பட வேண்டும்.
நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை காரணமாக காட்டுத்தீ போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும். அது மிக வேகமாக பரவும் அபாயம் காணப்படுகிறது. அதனால் இது குறித்து தீவிர அவதானத்துடன் இருக்க வேண்டும்.
அத்துடன்,வரவிருக்கும் காலநிலை மாற்றங்களுக்கு முன்னர் தயாராவதற்கு, எல்-நினோ முன்னறிவிப்புகள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புடன் இருப்பது அவசியமாகும். இதனிடையே, எல் நினோ தாக்கத்தின் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு





