இலங்கை இ கி மிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தாஜீயின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

 


( வி.ரி.சகாதேவராஜா)

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் தலைமையில், அவரது ஆசீர்வாதத்துடன் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை, மூன்று முக்கியமான நூல்கள் கல்லடி சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகாராஜ் வரவேற்புரையுடன் கூடிய விளக்கவுரை நிகழ்த்தினார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் சைவப் புலவர். மு. சேமகரன் எழுதிய “நற்றமிழ் ஞாயிறு சுவாமி விபுலானந்தர்”, கலாபூஷணம் சதாசிவம் சரவணபவன் எழுதிய
“பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பேரானந்தத் திருவமுது”, மறைந்த ஸ்ரீமத் சுவாமி அஜராத்மானந்தஜி மகாராஜ் எழுதிய
“சிவ சிந்தனைகள்”
ஆகிய மூன்று முத்தான நூல்கள் வெளியிடப்பட்டன.

சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் எவ். பாரதி கென்னடி, (பணிப்பாளர், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்),
பி. பாலஸ்ரீதரன், (இணைப்புச் செயலாளர், புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார பிரதியமைச்சு), கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி நிர்மலேஸ்வரி பிரசாந்த் மற்றும் கலாநிதி த. விவானந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நூலாசிரியர்களின் ஏற்புரைகளும் இடம்பெற்றன.

பல அமைப்புகளின் பிரதிநிதிகள் மிசன் ஆர்வலர்கள் அபிமானிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.