( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை நகர லயன்ஸ் கழகமும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையும் இணைந்து ஏற்பாடு
தொலைதூரமும்,
அடிப்படை வசதிகள் குறைந்ததுமான தங்கவேலாயுதபுரம் விவசாயக் கிராம மக்களின்
நலனை கருத்திற்கொண்டு, இலவச மருத்துவ முகாமொன்றை வெற்றிகரமாக
நடத்தியுள்ளன.
கழகத்
தலைவர் பொறியியலாளர் லயன் என்.கதீசன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முதலாவது மாவட்ட உதவிஆளுநர் (FVDG) லயன் ரி.
ஆதித்தன், கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதியாக மாவட்ட GST லயன் புஷ்பஹரன் கலந்து கொண்டார்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அர்ப்பணிப்புமிக்க மருத்துவக் குழுவினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற
இம்மருத்துவ
முகாமின் மூலம், வழக்கமான மருத்துவ வசதிகளைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை
எதிர்கொள்ளும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள்
அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கப்பட்டன.
மருத்துவ
முகாமை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய திருக்கோவில்
ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர் எஸ்.மதன்,
மருத்துவர் எஸ். சுஜீவன், வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்கள், லயன்ஸ் கழக
உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், அதிதிகள் மற்றும் அனைத்து
ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
“சேவை
என்பது ஒரு திட்டத்தை நடத்துவதுடன் முடிவடைவதல்ல; உண்மையான தேவையை
அடையாளம் கண்டு, உண்மையில் உதவி தேவைப்படுபவர்களைத் தேடிச் சென்று
அவர்களுக்கு சேவை செய்வதே” என்று உதவி ஆளுநர் ஆதித்தன் தெரிவித்தார்.
.
இப்பகுதிக்குச்
செல்லும் வீதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதால், பொதுமக்கள் பல்வேறு
சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அத்துடன், இப்பகுதியில் வசிக்கும்
பெரும்பாலான குடும்பங்கள் வறிய விவசாயக் குடும்பங்களாக உள்ளனர்.
காட்டு
யானைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்கள் காரணமாக,
இப்பகுதியில் வசித்து வந்த சில குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி
திருக்கோவில் பிரதேசத்தை நோக்கி இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்காக
கல்முனையிலிருந்து சுமார் 75 கிலோமீற்றர் தூரம் பயணித்து லயன்ஸ் கழக
உறுப்பினர்கள் தங்கவேலாயுதபுரத்தைச் சென்றடைந்து, அப்பகுதி மக்களுக்கு
மருத்துவ சேவைகளை வழங்கினர்.
மக்களின்
உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களைத் தேடிச் சென்று சேவையாற்றும்
மனிதாபிமானப் பணிகளுக்கு இத்தகைய முயற்சி சிறந்த முன்னுதாரணமாக
அமைந்துள்ளது. விளையாட்டு

















