மட்டக்களப்பு நாவற்குடாவில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து – பலர் காயம்



மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டி பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, வீதியைக் கடக்க முற்பட்ட நபர் ஒருவருடன் மோதியதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அவசர நோயாளர் காவுவண்டி சேவை மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.