கடந்த யுத்த காலத்தில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, உரியவர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாதுகாப்புத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து இராணுவ முகாம்கள் அமைப்பதற்கான நிலங்களைத் தீர்மானிக்கும் அதேவேளையில், விடுவிக்கக்கூடிய தனியார் மற்றும் பொதுக் காணிகள் குறித்த இறுதித் தீர்மானத்தை விரைவாக எடுக்குமாறும் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் அறிவுறுத்தினார்.





