மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது
தலைமையில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களது ஆலோசனை
மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக,
மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், மாவட்ட உளவள துணை
இணைப்பாளர் ஆகியோரது ஒருங்கிணைப்பில் குறித்த கூட்டமானது பழைய மாவட்ட செயலக
மாநாட்டு மண்டபத்தில் இன்று (18) திகதி இடம்பெற்றது.
சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் இடம் பெற்ற
குறித்த கூட்டத்தின் போது கடந்த கால முன்னேற்ற மீளாய்வு
மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் போது 18 வயதிற்கு குறைந்த சிறார்களை வேலைக்கு
அமர்ந்துவது, சிறுவர் இல்லங்களின் தேவைப்பாடுகள் அவற்றை நிருவகிப்பதில்
காணப்படும் இடர்பாடுகள்,
சறோஜா வேலைத்துட்டம்,
கட்டாய கல்வி குழு, கோட்ட மட்ட கல்விக்குழு ஆகியவற்றின் எதிர்கால மற்றும்
நிகழ்கால செயற்றிட்டங்களின் முன்னேற்றம், அரசினால் முன்னெடுக்கப்படும்
திவியட்ட சவிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், கிராம மட்ட சிறுவர்
அபிவிருத்தி குழுக்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பாக இதன் போது
விரிவாக ஆராயப்பட்டதுடன், அரசாங்க அதிபரினால் முன்னேற்றகரமான நடவடிக்கைகளை
தொடர்வதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.





