புனித விண்ணேற்பு அன்னையின் பெருவிழா – 2026
✝️ புனித மரியாள் பேராலயம் – புளியந்தீவு, மட்டக்களப்பு
218வது வருடாந்த பெருவிழா – 2026
மரியன்னையின் விண்ணேற்புப் பெருவிழா திருப்பலி பக்தி மற்றும் ஆன்மிக எழுச்சியுடன் கடந்த 15.08.2026, அன்று சிறப்பாக நடைபெற்றது.
திருப்பலி, மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி J. ஜோர்ஜ் ஜீவராஜ் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. பல அருட்தந்தையர்கள் பக்தியுடன் கலந்துகொண்டு திருப்பலியை சிறப்பித்தனர்.
திருப்பலி நிறைவில் இறைமக்களுக்கு அன்னை மரியாளின் சிறப்பு ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன், திருவிழாவின் நிறைவாக கொடியிறக்கமும் இடம்பெற்றது.
இவ்வாறு அன்னை மரியாளின் அருளும் அன்பும் நிறைந்த வகையில் 218வது வருடாந்த பெருவிழா இனிதே நிறைவுபெற்றது.
“புனித விண்ணேற்பு அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.” 🙏
அன்னை மரியாளின் அன்பும் அருளும் அனைவரது குடும்பங்களிலும் என்றும் நிறைந்திருக்கட்டும்.


.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)




